Thinai Nei Appam Recipe
Thinai Nei Appam Recipe

தேவையான பொருட்கள்:

திணை – 2 கப்,
இட்லி அரிசி – கால் கப்,
வெள்ளை உளுந்து – 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – ஒரு ஸ்பூன்,
தேங்காய் – ஒரு ஸ்பூன்,
வடித்த சாதம் – ஒரு கைப்பிடி,
உப்பு – தேவைக்கேற்ப,
சர்க்கரை – 2 டீஸ்பூன்.

செய்முறை:

1) முதலில் திணையுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைத்து தேங்காய் மற்றும் வடித்த சாதம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

2) சிறிதளவு பச்சரிசியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொண்டு
அதனை கஞ்சி பதத்திற்கு காய்ச்சி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

3) சூடு தணிந்ததும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள ஆப்ப மாவுடன் கலந்து விடவேண்டும். உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலக்கிய மாவை புளிக்க விட வேண்டும்.

4) மறுநாள் புளித்த மாவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கடாயில் வார்த்து எடுக்க வேண்டும்.

5) சுவையும் சத்துமிக்க தினை ஆப்பம் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here