Thiagarajan Kumararaja vs Ajith
Thiagarajan Kumararaja vs Ajith

Thiagarajan Kumararaja vs Ajith – தியாகராஜா குமாரராஜா எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. தைரியமான கதை, வித்தியாசமான திரைக்கதை என இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக தியாகராஜா குமாரராஜாவுக்கு ஒரு பெரும் ரசிகர் படையே உருவாகிவிட்டது.

ஆனால் சமீபத்திய பேட்டியொன்றில் அவர் பேசியது அஜித் ரசிகர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் திரைக்கதை ஆசிரியராக தியாகராஜா குமாரராஜாவின் பெயரும் வரும்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “ என்னிடம் கௌதம் மேனன் அப்படத்தின் கதையை சொன்னார். நானும் சரி என்றேன். அவ்வளவுதான் எனக்கும் அந்த படத்துக்குமான தொடர்பு. மற்றபடி எனக்கும் அந்த படத்துக்கும் சம்பந்தம் கிடையாது” என்றார்.

அஜித் போன்ற உச்ச நட்சத்திரத்தின் படத்தில் தன் பெயர் வந்தது தியாகராஜா குமாரராஜா விரும்பவில்லை என்பது அதில் அப்பட்டமாக தெரிந்தது.

மேலும் அவருடைய பதிலும் அந்த படத்தை இழிவுப்படுத்துவது போன்றே இருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர்.

Thiagarajan Kumararaja
Thiagarajan Kumararaja