பேஸ்புக் எந்த ஒரு தமிழ் படங்கள் பயக்காத சாதனையை படைத்துள்ளது விஜய் படத்தின் காட்சி.

Theri Scene Record in Facebook : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 அந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற்றன. ‌‌

பேஸ்புக்கை விட்டுவைக்காத தளபதி.. எந்த ஒரு தமிழ் படமும் படைக்காத சாதனையை படைத்த விஜய் பட காட்சி.!!

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ், டிஆர்பி, ட்விட்டர் ட்ரென்டிங் என பல்வேறு சாதனைகளை படைப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளமான முகநூல் பக்கத்தில் திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி 10 மில்லியன் லைக்குகள் பெற்று அபார சாதனையை படைத்துள்ளது. முகநூலில் இதுவரை எந்த ஒரு தமிழ்த் திரைப்படமும் இப்படி ஒரு சாதனையை படைத்தது இல்லை என்பதால் விஜய் ரசிகர்கள் இதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பேஸ்புக்கை விட்டுவைக்காத தளபதி.. எந்த ஒரு தமிழ் படமும் படைக்காத சாதனையை படைத்த விஜய் பட காட்சி.!!