Theri Baby Nainikha Photos

மீனாவின் மகள் நைனிகா தற்போது கிடுகிடுவென வளர்ந்து விட்டார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Theri Baby Nainikha Photos : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்திருப்பவர் மீனா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா முத்து படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்ததை தொடர்ந்து தற்போது மீண்டும் அண்ணாத்த படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

மேலும் நடிகை மீனாவின் மகள் நைனிகா சிறு குழந்தையாக தளபதி விஜயுடன் இணைந்து தெறி படத்தில் நடித்திருப்பார். அந்த படத்திற்கு பிறகு மேலும் சில படங்களில் நடித்திருந்தார்.

தற்போது நைனிகா கிடுகிடுவென வளர்ந்து விட்டார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை நடிகை மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நைனிகா நன்றாக வளர்ந்து விட்டதாக தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்