Thengai Paal Rasam : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Thengai Paal Rasam :

தேவையானப் பொருட்கள்:

தேங்காய் – ஒரு மூடி,
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் – 3,
மிளகு – ஒன்றரை தேக்கரண்டி,
கடுகு – அரை தேக்கரண்டி, கருவேப்பிலை – ஒரு கொத்து,
உப்பு – தேவைகேற்ப.
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி.

செய்முறை:

1) தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக் கொள்ளவும்.

2) தண்ணீரில் புளியை ஊறவைத்து கரைத்து பாலுடன் சேர்த்து, உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.

பச்சைக் கற்பூரத்தின் மகிமை தெரியுமா உங்களுக்கு?. பச்சை கற்பூரத்தை இப்படி வைத்தால் பணம் கொட்டோ கொட்டும். தெரிந்து கொள்ளுங்கள்!

3) ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, மிளகாயைக் கிள்ளிப் போட்டு சிவந்ததும், மிளகைப் போடவும். மிளகு படபட வென்று வெடித்ததும் ரசக் கரைசலை ஊற்றி நுரை கூடியதும் ஒரு முறை கிண்டி விட்டு இறக்கவும்.

4) கூட்டு வகைகளை வைத்துக் கொண்டு உண்ண இந்த ரசம் நன்றாக இருக்கும். இந்த ரசம் கொதித்து விட்டால் திரிந்த பால் போல நன்றாக இருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here