ஒரே ஒரு ப்ரோமோ வீடியோ வெளியான நிலையில் புதிய சீரியலுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Thendral Vanthu Ennai Thodum Serial Trolls : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து பல சீரியல்கள் உருவாகி வருகின்றன.

சரஸ்வதியும் தமிழும் சீரியலை தொடர்ந்து அடுத்ததாக விஜய் டிவியில் புதியதாக தென்றல் வந்து எண்ணை தொடும் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. சுந்தரி நீயும் சுந்தரன் நானும் வினோத் பாபு ஹீரோவாக நடிக்க ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை பவித்ரா நாயகியாக நடிக்கிறார். இந்த சீரியலின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது.

எனக்கு இரண்டு வரம் வேண்டும் : பெற்றவளிடம் கேட்கிறான் கர்ணன்

இதில் ஒரு பெண்ணின் கழுத்தில் திடீரென தாலி கட்டுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக இந்த ப்ரோமோ வீடியோ இருப்பதாக கூறிய விஜய் டிவியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் இந்த சீரியல் திட்டமிட்டபடி தொடங்குமா அல்லது தொடங்காதா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

Shooting Spot-ல் Vishal-க்கு அடிபட்டு காயம்.., Hospital-லில் அனுமதி..! | Shocking | Latest News | HD