Court Verdict on Soorarai Pottru Case :
Court Verdict on Soorarai Pottru Case :

சூரரைப் போற்று திரைப்படம் OTT வழியாக வெளியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் விஜய் பட தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Thenandaal Films About Soorarai Potru Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த படத்தை சூர்யாவே தயாரித்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

சூர்யாவுக்கு எதிரா பிரச்சனையை திசை திருப்பறாங்க – பாரதிராஜா ஆவேசம்..!

மேலும் இப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் இப்படத்தை அக்டோபர் 10ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த அறிவிப்பு தமிழ் சினிமா திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் சூர்யா சுயநலமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இப்படியான நிலையில் தளபதி விஜயின் மெர்சல் படத்தை தயாரித்திருந்தார் பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் யார் யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை. ஆன்லைன் டிக்கெட், VPX போன்றவைகள் குறித்து நிரந்தரத் தீர்வு காண விநியோகிஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து அமர்ந்து பேசி சுமுகமான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

தமிழ் சினிமா வளர வழி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.