ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு கும்பல் கைவரிசியை காட்ட தங்கம் வைரம் நகைகள் காணாமல் போய் உள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகை தனுஷ் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் என புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அளித்த புகாரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.