Theerkka Sumangaliya Vala

☆ சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும்.

☆ காரடையான் நோன்பினை வழிபட தீராத குறைகளையும் தீர்த்து அருள்செய்யும் அன்னை காமாக்ஷி தீர்க்க சுமங்கலியாக வாழ வைப்பார் என்பதில் மாற்றமில்லை.

☆ இவ் விரதம் சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கௌரி விரதம் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. சாவித்ரி இந்த விரதத்தை கடைப்பிடித்ததால் சத்தியவானின் உயிர் பிரிந்த போதும் மீண்டும் உயிர் பெற்று சாவித்திரி தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள் என்பது ஐதீகம்.

☆ விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும்.

☆ கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும்.

☆ அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள்.

☆ நோன்பின் பலன்கள்:
1) கணவன் மனைவிக்கு இடையே உள்ள சண்டை சச்சரவுகள் கருத்து வேறுபாடுகள் மறையும்.
2) பாசம், நேசம், அந்நியோன்யம் அதிகரிக்கும்.
3) பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடுவர்.
4) குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
5) கன்னிப்பெண்களுக்கு நிறைவான திருமண வாழ்வு கிடைக்கும். எல்லாவித செல்வங்களும் நிறைவான வாழ்க்கை பெண்களுக்கு கிடைக்கும் காரடையான் நோன்பு மேற்கொண்டு வாழ்க்கையின் இன்னல்களை வென்று சுப மங்களமாக வாழலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here