மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று இணையத்தை தெறிக்கவிடும் தீ தளபதி பாடல்.

ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

அதிக பார்வையாளர்களை கடந்து இணையத்தை தெறிக்க விடும் 'தீ தளபதி' பாடல்!!…. படக்குழு அறிவித்த மகிழ்ச்சி தகவல் வைரல்.!

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ வழங்க இருக்கும் இப்படத்தில் தமன் இசையில் சிம்பு பாடி இருக்கும் இரண்டாவது சிங்கிள் பாடலான “தீ தளபதி” பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடல் தற்போது வரை மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைக் கடந்து இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

அதிக பார்வையாளர்களை கடந்து இணையத்தை தெறிக்க விடும் 'தீ தளபதி' பாடல்!!…. படக்குழு அறிவித்த மகிழ்ச்சி தகவல் வைரல்.!

இது பற்றி இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் ‘தீ தளபதி’ பாடல் இணையதளத்தில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் சமூக வலைதள பக்கத்தில் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.