வாரிசு திரைப்படத்தின் தீ தளபதி பாடலின் வீடியோ வெளியானது.

கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களின் ஒருவராக வளம் வரும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் கடந்த 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியானது. வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக வெளியான இப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது.

மேலும் இப்படத்தில் தமன் இசையில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்திருந்ததை தொடர்ந்து தற்போது அப்பாடல்களின் வீடியோக்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே வெளியாகி இருந்த ஜிமிக்கி பொண்ணு பாடலைத் தொடர்ந்து தற்போது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த பாடலான “தீ தளபதி” பாடலின் வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் இணையத்தில் தீயாக பரப்பி வைரலாக்கி வருகின்றனர்.

YouTube video