Theatres open for 24 hours for Nerkonda Paarvai
Theatres open for 24 hours for Nerkonda Paarvai

அஜித் நடிப்பில் வெளியாகும் நேர்கொண்ட பார்வை படம்தான் முதல் முறை தமிழகத்தில் 24 மணி நேரமும் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Theatres open for 24 hours for Nerkonda Paarvai – விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித்தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இனி தெறிக்க போகும் அஜித், விஜய் பட வசூல் – ரசிகர்கள் கொண்டாட வைத்த தமிழக அரசின் அறிவிப்பு.!

அண்மையில் தமிழக அரசு இனி தமிழகத்தில் 24 மணி நேரமும் திரையரங்கங்கள் திறக்கப்படலாம் என ஒரு அரசாணை வெளியிட்டது.

எனினும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் நாளில் மட்டும் 24 மணி நேரம் திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அஜித் நடிப்பில் வெளியாகும் நேர்கொண்ட பார்வை படம் தான் முதல் முறை தமிழகத்தில் 24 மணி நேரமும் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையே வெற்றி திரையரங்கின் உரிமையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.