படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதால் சாயம் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

Theatres Increased for Saayam Movie : ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்த படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

படிக்கும் காலத்திலேயே மாணவர்களிடம் ஜாதி உணர்வு புகுத்தப்பட்டால் அது அவர்களது எதிர்கால வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

சாயம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 4 அன்று தமிழகமெங்கும் 90 திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே தென் மாவட்டங்களில் இருந்து இயக்குனருக்கு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தது. அத்தனை எதிர்ப்புகளையும் மீறி பல திரையரங்குகளில் படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது சாயம் திரைப்படம்.

தென்மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் படத்தில் காட்சிகள் இருப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர். இதனால் பல தியேட்டர்களில் காட்சிககள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் ரிலீஸ் அன்று திரையிடப்படாத பல தென் மாவட்ட தியேட்டர்கள் கடந்த திங்கள் முதல் படத்தை திரையிட துவங்கியுள்ளனர். படத்தின் வெற்றியை உணர்ந்த மதுரை சண்முகா (மாப்பிள்ளை விநாயகர் ), வத்தலகுண்டு சீனியப்பா, திருநெல்வேலி, சுரண்டல் மற்றும் கடையம் ஆகிய இடங்களில் ஒரு தியேட்டர் என தியேட்டர் உரிமையாளர்களே தாமாக முன்வந்து கடந்த ஞாயிறு முதல் சாயம் படத்தை தனது தியேட்டரில் வெளியிட்டு வருவதே இந்த வெற்றிக்கு உதாரணம்.இது போல தமிழகத்தில் பல காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாயம் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.