Theatre Owners Plan on Master
Theatre Owners Plan on Master

மாஸ்டர் படத்தை வைத்து தியேட்டர் உரிமையாளர்கள் மாஸ் பிளான் ஒன்றை திட்டமிட்டுள்ளனர்.

Theatre Owners Plan on Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

சத்தமில்லாமல் விஜய் சேதுபதி படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் அஜித் பட நாயகி – வெளியான செம அப்டேட்!

இந்த படம் ஏப்ரல் 9-ம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் கொரானா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

இதனால் தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் திரையரங்குகள் திறந்தவுடன் மாஸ்டர் படத்தைத் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என திட்டமிட்டு உள்ளனர்.

மாஸ்டர் படம் ரிலீசானால் தான் விஜய் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். அவர்கள் மூலமாக தான் மக்கள் மனதில் இருக்கும் பயத்தை போக்க முடியும்.

இல்லையென்றால் மக்களை தியேட்டருக்கு வர வைப்பது என்பது மிகப்பெரிய சவாலான ஒன்றாக மாறி விடும் என அவர்கள் கருதுகின்றனர்.

விஜயுடன் உறுதியாக மோதும் சூர்யா?? இந்த தேதியில் தான் ரிலீசா? – தியேட்டர் உரிமையாளர் பதிவிட்ட பரபரப்பு ட்வீட்.!

இதனால் இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரானா பயத்தை தாண்டி மாஸ்டர் படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.