பத்தே நாளில் பீஸ்ட் படத்திற்கு வந்த சோதனையால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Theatre Owners Decision on Beast Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் பீஸ்ட். ஆனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

ரசிகர்கள் எதிர்பார்த்த படி இந்த படம் கொஞ்சமும் இல்லை என பலரும் குறை கூறி வருகின்றனர். இதனால் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வெளியான கேஜிஎப் இரண்டாம் பாகத்திற்கு மக்கள் அமோக வரவேற்பை அள்ளிக் கொடுத்துள்ளனர்.

இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக திரையரங்குகளில் டீஸ்ட் படத்தை தூக்கிவிட்டு கேகே படத்தை திரையிட தொடங்கி வந்த நிலையில் தற்போது பெரும்பாலான திரையரங்குகள் பீஸ்ட் படத்தை எடுத்து விட்டு கேஜிஎப் படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.

திரையரங்க உரிமையாளர்களை இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் பீஸ்ட் படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.