Theatre Owners Association Decision on Suriya Movies Release
Theatre Owners Association Decision on Suriya Movies Release

சூர்யா, கார்த்தி படங்களை இனி தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Theatre Owners Association Decision on Suriya Movies Release : கொரானா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. வழிபாட்டுத்தலங்கள், தியேட்டர்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்த் திரையுலகின் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்ததால் பல திரைப்படங்கள் OTT வழியாக வெளியிடப்பட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் தயாரிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT வழியில் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அப்போதைய கண்டனம் தெரிவித்திருந்தது.

விஜயுடன் உறுதியாக மோதும் சூர்யா?? இந்த தேதியில் தான் ரிலீசா? – தியேட்டர் உரிமையாளர் பதிவிட்ட பரபரப்பு ட்வீட்.!

இருப்பினும் தடைகளை மீறி பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

இதனையடுத்து தற்போது தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இனி சூர்யாவின் குடும்பத்தினர் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்யமாட்டோம் என முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பொன்மகள் வந்தால் பாரத்தை OTT வழியாக ரிலீஸ் செய்தது போல இனி அவர்களை பாடத்தையும் அப்படியே ரிலிஸ் செய்து கொள்ளட்டும் என கூறியுள்ளார்.

தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த முடிவை ஒட்டுமொத்த சூர்யா, கார்த்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விரைவில் இந்த விவகாரம் குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் சூர்யா தரப்பிலிருந்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொடர்ந்து பேசிய பன்னீர் செல்வம் அரசு சொல்லும் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும், நடவடிக்கைகளையும் பின்பற்றி நடக்க நாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.