வலிமை படம் ஆயுத பூஜை தினத்தில் வெளியான வசூல் வேற லெவல் இருக்கும் என திரையரங்க உரிமையாளர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

Theatre Owner Tweet About Valimai : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்திற்கு இவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த தேதியில் வலிமை படம் ரிலீஸா?? அப்போ வேற லெவல் வசூல் உறுதி - பிரபல திரையரங்கு உரிமையாளர் அதிரடி ட்விட்.!!

படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல திரையரங்கான வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் கௌதம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கே ஜி எஃப் 2 திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. RRR திரைப்படம் 2022 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த தீபாவளி ரிலீஸ்.

இன்று 163 நாடுகள் பங்கேற்கும் பாராஒலிம்பிக் : மாரியப்பனுக்கு பதில், தேக் சந்த் கொடியேந்துகிறார்

இப்படியான நிலையில் வலிமை திரைப்படம் ஆயுத பூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி வெளியானால் நீண்ட விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் வேற லெவல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்யலாமா கேட்ட ரசிகர்? – குஷ்பு கொடுத்த ஷாக்கிங் பதில்! | Khushboo Tranformations

படக்குழுவும் இந்த தேதியில் ரிலீஸ் செய்யும் திட்டத்தில் உள்ளதா என்ற கேள்வி இதன் மூலம் எழுந்துள்ளது. திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி வெகு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.