பிகில் படம் 300 கோடி வசூல் செய்ததாக வெளியான தகவல் வடிகட்டின பொய் என பேசியுள்ளார் பிரபலம் ஒருவர்.

Theatre Owner Sridhar About Bigil Collection : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றது.

பிகில் படம் 300 கோடி வசூல் என்பது சுத்தப் பொய்.. உண்மையான தமிழக வசூல் இவ்வளவுதான் - சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

அதைப்போல் அந்த படத்திற்கு முன்னதாக அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது பிகில் படம் ரூபாய் 300 கோடி வசூல் செய்ததாக வெளியான தகவல் உண்மையல்ல. இது வடிகட்டின பொய். தமிழகத்தில் பிகில்படம் ரூபாய் 130 கோடி தான் வசூல் செய்தது என திருச்சியைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

பெரிய பலன்கள் தரும், சின்னச் சின்ன பரிகாரங்கள்.!

மேலும் ஒரு சிலர் மட்டுமே திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடம் கேட்டு வசூல் விவரங்களை வெளியிடுகின்றனர். பல பத்திரிகைகள் அவர்கள் வாய்க்கு வந்ததை வசூலாக குறிப்பிடுகின்றனர். அசுரன் படத்திற்கு வந்த கூட்டம் அதே தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு வரவில்லை. வெறும் 40 பேர் தான் படத்தைப் பார்த்தார்கள்.

Survivor ரியாலிட்டி Show-வில் கலந்து கொள்ளும் TOP பிரபலங்கள்! – யார் யார் தெரியுமா?

ஒரு படத்தின் வெற்றி என்பது மக்களின் மன நிலையில் உள்ளது என கூறியுள்ளார்.