Theater Owners Plan After Unlock
Theater Owners Plan After Unlock

ஊரடங்கு முடிந்ததும் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளது என தியேட்டர் உரிமையாளர்கள் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளனர்.

Theater Owners Plan After Unlock : சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பரவத் தொடங்கியது கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.

அஜித்தின் அடுத்தடுத்த 4 படங்கள் படைத்த சாதனை, அதிகாரபூர்வமாக அறிவித்த தியேட்டர் நிர்வாகம் – புகைப்படத்துடன் இதோ.!

இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்க உள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தினை குறைப்பதற்காக கடந்த மார்ச் 23ம் தேதியிலிருந்து இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்ததும் திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பழையபடி கூட்டம் வருமா என்பது கேள்விக்குறி.

அதுமட்டுமல்லாமல் அரசாங்கமும் தியேட்டரில் இவ்வளவு பேர் தான் படம் பார்க்க வேண்டும் என சில கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளது.

எனவே தியேட்டர் உரிமையாளர்களின் மக்களை தியேட்டருக்கு வர வைப்பதற்காக டிக்கெட் விலைகளை குறைக்க முடிவு செய்துள்ளனர்.

விஜயுடன் உறுதியாக மோதும் சூர்யா?? இந்த தேதியில் தான் ரிலீசா? – தியேட்டர் உரிமையாளர் பதிவிட்ட பரபரப்பு ட்வீட்.!

அதற்காக அரசாங்கம் சில வரிகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டிக்கெட் விலையை குறைத்தால் மக்கள் தியேட்டருக்கு வருகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.