Theater Owner About Movie Release
Theater Owner About Movie Release

மாஸ்டர், சூரரைப்போற்று படம் எப்போது ரிலீஸாகும் என பிரபல தியேட்டர் நிர்வாக உரிமையாளர் கூறியுள்ளார்.

Theater Owner About Movie Release : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வருகின்றன‌.

அதிலும் குறிப்பாக மாஸ்டர், சூரரைப்போற்று போன்ற பெரிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன.

2019-ல் அதிகம் வசூல் செய்த டாப் 8 படங்கள், முதலிடத்தில் அஜித்தா? ரஜினியா? – தியேட்டர் நிர்வாகம் வெளியிட்ட அதிகாரபூர்வ லிஸ்ட்.!

இந்த படங்கள் ரிலீசாகாமல் போனது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. எப்போதுதான் ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் கௌதமன் இந்த படங்கள் தீபாவளிக்கு வெளியாகவே வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.