சுதந்திர தினத்தன்று வெளியான மூன்று படங்களின் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த மாதத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மூன்று தமிழ் திரைப்படங்கள் வெளியானது. அந்தப் படங்களின் ஆறு நாள் வசூல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
முதலாவதாக சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஆறு நாட்களில் உலகம் முழுவதும் 52 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாவதாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகு தாத்தா. இந்த படம் வெளியாகி ஓரிரு நாட்களிலேயே வசூல் குறைந்த நிலையில் ஆறு நாட்களில் 2.49 கோடி வசூல் செய்துள்ளது.
மூன்றாவதாக அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்டி காலனி 2. இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் உலக அளவில் 25 கோடி வசூல் செய்துள்ளது.
இந்த மூன்று படங்களில் அதிகமாக வசூல் சாதனையை தங்களால் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.