The seeds of the grains are wonderful
The seeds of the grains are wonderful

# தானியங்களை சமைத்து உண்டால் தான் ஆரோக்கியம் கூடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சமைக்காத தானியமும் ஆரோக்கியத்தைத் தரும். தானியங்களை கைகளில் வைத்து கட்டும் முறைக்கு விதை சிகிச்சை என்பது பெயராகும். இத்தகைய சிகிச்சை முறையில் பல நோய்கள் குணமாகிறது.

# விரல்களும் சக்திகளும்: நமது உடலை இயக்கும் பஞ்ச பூத சக்திகள் கைவிரல்களில் உள்ளன.

கட்டைவிரல் — நெருப்பு
ஆள்காட்டிவிரல் – காற்று
நடுவிரல் —– ஆகாயம்,
மோதிரவிரல் —– நிலம்
சுண்டுவிரல் —— நீர்

#அது போல நமது உடலில் உள்ள உறுப்புக்கள் இந்த பஞ்சபூத சக்திகள் இயக்கப்படுகின்றன.
இதயம் சிறுகுடல் – நெருப்பு
நுரையீரல் பெருங்குடல் – காற்று

கல்லீரல் பித்தப்பை – ஆகாயம்

மண்ணீரல் இரைப்பை – நிலம் சிறுநீரகம் சிறுநீர்ப்பை- நீர்
இந்த பிரதிபலிப்பு புள்ளிகள் கைகளிலும் விரல்களிலும் உள்ளன.

# இதற்கு நாம் விரல்களில் சிகிச்சை செய்வதால் நோய்கள் குணமாகின்றன. மிளகு, கொள்ளு, கடுகு – சூடு தன்மை உள்ள விதைகள்.
வெந்தயம், பச்சைபயறு – குளிர்ச்சித்தன்மை உள்ள விதைகள்.

# தட்டைப்பயிறு, கொண்டைகடலை — வாயுத் தன்மை உள்ள விதைகள்
சோயாபீன்ஸ் -சமநிலைப்படுத்தும் தன்மையுள்ள விதை

# இவ்வாறு பற்பல தன்மைகளைக் கொண்ட பல விதைகளை கை விரல்களில் வைத்து கட்டுவதால் கண், காது, மூக்கு முதல் உடலில் ஏற்படும் பல்வேறு வலிகள் மற்றும் பல்வேறு நோய்கள் குணமாகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here