The Secret Of Natural Medicines : Health Tips | Daily Health Tips | Top 10 Best Health Benefits | Easy To Follow Daily Health Tips

The Secret Of Natural Medicines :

அரச மரமும் அவற்றின் மருத்துவ குணமும்:

1) அரச மரத்தின் கனிகள் ஜீரண சக்தியை ஊக்குவிக்கும் மலத்தை வெளியேற்றும்.

2) அரச பட்டையை இடித்து பொடியாக்கி 200 மில்லி லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தூளை போட்டு காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர இருமல் தணியும்.

பூண்டின் பிரமாதமான மருத்துவக் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!

3) அரச மரத்தின் பழுப்பு இலைகளை இடித்து தூளாக்கி தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண் மற்றும் அதனால் ஏற்பட்ட தழும்புகள் குணமாகும்.

4) அரசு துளிரை பாலில் இட்டு காய்ச்சி சர்க்கரை சேர்த்து பருக செய்தால் குளுமை தரும். உடலை செழிப்புற செய்யும்.

5) அரசம்பட்டை சாற்றில் வாய் கொப்பளித்தால், வாய் நோய் தோன்றக் கூடிய எந்த வகை புண்களையும் குணப்படுத்தும். விக்கல் அடங்கும். கபத்தையும் பித்தத்தையும் குணப்படுத்தும்.

6) அரச இலை கொழுந்தை பசும்பாலில் இட்டு காய்ச்சி சர்க்கரை சேர்த்து குடிக்க சுரம் குணமாகும்.

7) அரச மரத்தின் இலைக் கொழுந்தை அரைத்து மோருடன் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.

8) அரச இலை பொடி ஆண்களின் நீர்த்த விந்தணுவை கெட்டியாக மாற்றவல்லது.

9) அரசமரப் பட்டையை கசாயம் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் பூச்சிகள் குடல் புழுக்கள் அழியும்.

10) அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும், மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here