லெஜெண்ட் சரவணன் அவர்களின் நடிப்பில் வெளியாகி உள்ள தி லெஜன்ட் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடை உரிமையாளரான லெஜெண்ட் சரவணன் ஏற்கனவே பல விளம்பர படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது ஹீரோவாக தி லெஜன்ட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகியுள்ளார்.

தன்னுடைய முதல் படமான இந்த படத்தை தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் என பான் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் லெஜன்ட் சரவணன் ஜோடியாக கீத்திகா திவாரி நடிக்க பிரபு, விஜயகுமார், விவேக், ரோபோ சங்கர் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் கதைக்களம் :உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி இருக்கும் சரவணன் பல சாதனைகளை செய்து முடித்து பிறகு தன்னுடைய சொந்த ஊருக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் வருகிறார். ஊருக்கு வந்த இவர தன்னுடன் பயின்ற நண்பர் ரோபோ சங்கரை பார்க்கிறார். ரோபோ சங்கருக்கும் அவருடைய இரண்டு குழந்தைகளுக்கும் பிறந்ததிலிருந்து சர்க்கரை வியாதி இருப்பது தெரிகிறது. சக்கரை வியாதியால் குடும்பமே அவதிப்பட்டு கொண்டிருக்க ஒரு கட்டத்தில் ரோபோ சங்கர் இறந்து விடுகிறார். இதனால் கடும் அதிர்ச்சியடையும் சரவணன் இனி எந்த ஒரு குழந்தையும் சர்க்கரை நோயால் அவதிப்படக்கூடாது அதற்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்கிறார்.

சரவணன் முயற்சிகளுக்கு ஏற்படும் தடைகளை உடைத்தெரிந்து அவர் இதற்கு தீர்வு கண்டாரா இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

அறிமுகப்படுத்திய ஆக்சன், ரொமான்ஸ், சென்டிமென்ட் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார் லெஜன்ட் சரவணன். சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு கதையை தேர்வு செய்து நடித்துள்ளது பாராட்டத்தக்கது.

ரோபோ சங்கர் தன்னுடைய நடிப்பால் தனித்து நிற்கிறார். விவேக் அவர்களின் கடைசி படமாக இந்த படம் மூலம் நடிப்பால் நம்மை கவர்ந்துள்ளார். படத்தில் சரவணனின் அண்ணனாக நடித்துள்ள பிரபு அவருடைய முதிர்ச்சியான நடிப்பை திறம்பட கொடுத்துள்ளார். படத்தின் பாதியில் வரும் யோகி பாபு நம்மை சிரிக்க வைக்கிறார்.

நாயகியாக நடித்துள்ள கித்திகா நடிப்பு ஒகே ரகம். மற்ற அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை படத்திற்கு பெரிய பலம். எடிட்டிங் சில இடங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது.

இயக்குனர் ஜேடி ஜெர்ரி அவர்கள் நல்ல கதையை கையில் எடுத்து அதை அழகாக கொண்டு செல்ல முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளனர்.

REVIEW OVERVIEW
தி லெஜன்ட் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
the-legend-movie-reviewமொத்தத்தில் தி லெஜன்ட் திரைப்படம் நல்ல கதையால் நம்மை கவர்கிறது. கண்டிப்பாக பார்க்கலாம்.