தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது.

ஏ. எல் விஜய் அவர்களும் தேவி 2 படத்திற்கு பிறகு ஜெயலலிதாவின் பயோபிக் படத்தை இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அதே போல் மிஷ்கினின் உதவி இயக்குனரான ப்ரியதர்ஷினி The Iron Lady என்ற பெயரில் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் சசிகலாவாக நடிக்க வரலக்ஷ்மி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நித்யா மேனன் மெர்சல் படத்தில் தளபதிக்கு ஜோடியாகவும் வரலக்ஷ்மி சரத்குமார் சர்கார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.