The Indian Team is Not Resting : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match | Dhoni | Virat Kholi | Rohit Sharma

The Indian Team is Not Resting :

உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி சொந்த ஊரில் தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் டெஸ்ட் தொடர், ஒருநாள், டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. தற்போது இதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

2019-2020-ம் ஆண்டில் உள்ளூரில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டி விவரங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

இதன்படி, உள்ளூரில் இந்திய அணி 5 டெஸ்ட், 9 ஒரு நாள் மற்றும் 12 இருபது ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

ஒரு நாள் மற்றும் நியூஸிலாந்து தொடர்களில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு!

20 ஓவர் போட்டிகள் முறையே தரம்சாலா, மொகாலி, பெங்களூருவிலும், டெஸ்ட் போட்டிகள் முறையே விசாகப்பட்டினம், ராஞ்சி மற்றும் புனேயிலும் நடைபெறுகிறது.

வங்காளதேச அணி நவம்பர் மாதத்தில் வருகிறது. அந்த அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. 20 ஓவர் போட்டி டெல்லி, ராஜ்கோட், நாக்பூரிலும், டெஸ்ட் போட்டி இந்தூர், கொல்கத்தாவிலும் நடக்கிறது.

வெஸ்ட்இண்டீஸ் அணி டிசம்பர் மாதத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.

20 ஓவர் போட்டி மும்பை, திருவனந்தபுரம், ஐதராபாத்தில் நடக்கிறது. இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னையில் டிசம்பர் 15-ந் தேதி நடக்கிறது. 2-வது போட்டி விசாகப்பட்டினத்திலும், 3-வது போட்டி கட்டாக்கிலும் நடைபெறுகிறது.

ஜிம்பாப்வே அணி அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதத்தில் வந்து மூன்று 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது.

இந்த போட்டிகள் கவுகாத்தி, இந்தூர், புனேயில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி ஜனவரி மாதத்தில் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் மும்பை, ராஜ்கோட், பெங்களூருவில் நடக்கிறது.

தென்ஆப்பிரிக்க அணி மார்ச் மாதத்தில் இந்தியா வந்து 3 ஒரு நாள் போட்டியில் ஆடுகிறது. இந்த போட்டிகள் தரம்சாலா, லக்னோ, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடக்கிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.