கோட் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும்,ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில், கல்பாத்தி எஸ்.அகோரம் கல்பாத்தி எஸ். கணேஷ் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் ,ஜெயராம், யோகி பாபு ,யுகேந்திரன், பார்வதி நாயர் ,அரவிந்த் ஆகாஷ், கஞ்சா கருப்பு போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்தது. தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் 14 செகண்ட்ஸ் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது.அதில், நடிகர்களின் அறிமுகங்களை ஆரம்பத்திலேயே இயக்குனர் கொடுத்து விட ,15 நிமிடத்தில் இருந்து கதை பரபரப்பாக மற்றும் வெறித்தனமாக இருக்கிறது.இடைவேளைக்குப் பிறகும் எங்கேயும் கதை தேங்கி நிற்காமல் கிளைமாக்ஸ் வரை ஜெட் வேகத்தில் செல்வதாக தணிக்கை குழு அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.மேலும் கொஞ்சம் கூட போர் அடிக்கவே இல்லை, குறிப்பாக விஜய் 3 வேடங்களிலும் மிரட்டி இருப்பதாக பாராட்டியுள்ளனர்.
இந்த தகவலால் கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக அதிகரித்து உள்ளது.