கூலி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த்.இவர் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும், உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சத்யராஜ், மகேந்திரன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது அதில், நாளை மாலை 6:00 மணிக்கு கூலி படத்தின் கதாபாத்திரங்கள் குறித்து அறிவிக்க போவதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.