Pindam

மூன்று தலைமுறையின் பெயர்களுக்கு மட்டும் பிண்டம் கொடுக்கக் காரணம்:

☆ குழந்தை பிறக்க மூலகாரணமான பொருள் ஆணிடம் உள்ள ‘சுக்கிலம்’ எனப்படும் தாதுவாகும். இந்த தாதுவில் எண்பத்து நான்கு அம்சங்கள்(84) உள்ளன.

☆ அதில் 28 அம்சங்கள், அந்த மனிதன் உட்கொள்ளும் உணவு மற்றும் அருந்தும் நீர் முதலியவற்றால் உண்டாகும்.

☆ தந்தையிடம் இருந்து இருபத்தி ஓர் (21) அம்சமும், பாட்டனாரிடமிருந்து 15 அம்சமும், முப்பாட்டனாரிடமிருந்து 10 அம்சமும், நான்காம் மூதாதையரிடமிருந்து 6 அம்சமும், ஐந்தாம் மூதாதையிடமிருந்து 3 அம்சமும், ஆறாம் மூதாதையிடமிருந்து ஒரு அம்சமும் என ஆறு தலைமுறையினரின் 56 அம்சங்கள்,(21+15+10+6+3+1) ஏழாம் தலைமுறை மனிதனின் சுக்கிலத்தோடு தொடர்பு கொண்டவை.

☆ இதில் அதிகமாக தங்கள் அம்சத்தை தங்கள் வாரிசுகளுக்குத் தருபவர்கள் தகப்பனார், பாட்டனார், முப்பாட்டனார் ஆகிய மூவரே.

☆ எனவேதான் தவசத்தின் போது, இந்த மூவரின் பெயர்களைக் கூப்பிட்டு பிண்டம் கொடுக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here