Tharshan
பிக் பாஸுக்கு பிறகு தர்ஷன் வித்தியாசமான கெட்டப்பிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தர்ஷன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மனதை கொள்ளையடித்து விட்டார். கமல்ஹாசன் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகி இருந்தார்.

இந்நிலையில் தர்ஷன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாயில சிகிரெட்டுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு கம்மிங் சூன் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவருடைய படம் பற்றிய முக்கியமான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.