பிக் பாஸ் சீசன் 3-ல் பங்கு பெற்ற தர்ஷனுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமாகி வருகிறது.

Tharshan Join Thalapathy 64 : தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 முடிவடைந்த நிலையில் அதில் பங்கு பெற்ற தர்ஷன் அடுத்த அடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவகிறார்.

பிக் பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்து தனது நேர்மை மற்றும் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்திய போட்டியாளர் தர்ஷன்.

இவர் வெற்றி பெற்றுவார் என்று நினைத்த நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

 Dharshan In Thalapthy 64

நேயர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற தர்ஷன் எப்படி வெளியேறினார் என்பது வியப்பை அளித்தது.

அதனை தொடர்ந்து, தர்ஷன் இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதே சமயம், கமல் தர்ஷனுக்கு ராஜ் கமல் நிறுவனத்தின் பேட்ச் அணிவித்தார்.

மேலும், தற்போது தளபதி விஜய் அவர்களின் அம்மாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார் தர்ஷன்.

இதனால் சினிமா வட்டாரங்களில், தர்ஷன் தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் இதுவரையில் வரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here