குக் வித் கோமாளி சீசன் 3 இல் கலந்து கொள்ளப்போகும் சிவகார்த்திகேயன் நண்பர் பற்றிய தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tharshan in CWC3 : தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர். படத்தின் நாயகனாக தர்ஷன் என்பவர் நடித்திருந்தார்.

குக் வித் கோமாளி சீசன் 3-ல் இவரா?? இந்த சீசனோட அஸ்வின் இவர்தான் - கொண்டாடும் ரசிகர்கள்

ஏற்கனவே சில படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்த இவர் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார். சிவகார்த்திகேயன் நண்பர் என்பதாலும் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

குக் வித் கோமாளி சீசன் 3-ல் இவரா?? இந்த சீசனோட அஸ்வின் இவர்தான் - கொண்டாடும் ரசிகர்கள்

கனா படத்தின் மூலம் சாக்லேட் பாயாக வலம் வரும் தர்ஷன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த பெண் ரசிகைகள் தற்போது இல் இருந்து அவருக்கு ஆதரவு கொடுக்க துவங்கிவிட்டனர். இதனால் குக் வித் கோமாளி சீசன் 3-ன் அஸ்வின் இவர்தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.