Tharsha Gupta As Mullai in Pandian Stores Serial

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய முல்லையாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Tharsha Gupta As Mullai in Pandian Stores Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு அடுத்ததாக முல்லை என்ற கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார்.

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில், 24-ந்தேதி குடமுழுக்கு

இவருடைய நடிப்புக்கு ஆரம்பத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது ரசிகர்கள் இவரை ஏற்றுக் கொள்ள தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் ஊர்க்குருவி என்ற படத்தில் கவினுக்கு ஜோடியாக காவியா நடிக்க உள்ளதால் அவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியானது.

நான் அவருக்கு இங்க தான் சாப்பாடு வாங்கி கொடுத்தேன்! – Ajith பட இயக்குனர் Saran பேட்டி | HD

இதனையடுத்து தற்போது காவியா அறிவுமணி கேரக்டரில் அதாவது முல்லை என்ற கதாபாத்திரத்தில் அடுத்ததாக தர்ஷா குப்தா நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மீண்டும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரம் மாற்றப்பட இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.