
Viswasam Songs : விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்று ஆளுமா டோலுமா பாடல் அளவிற்கு பட்டய கிளப்பும் என பிரபல டான்ஸ் மாஸ்டர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.
நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, யோகி பாபு, விவேக், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். டி.இம்மான் இசையமைத்துள்ளார்.
பொதுவாக அஜித்தின் படங்களின் இன்ட்ரோ பாடல்களுக்கு கொரியோக்ராபர் செய்து வருபவர் கல்யாண் மாஸ்டர்.
இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் விஸ்வாசம் படத்தை பற்றியும் பேசியுள்ளார். அஜித் அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் நடித்துள்ளார்.
இதில் அப்பாவாக நடித்துள்ள அஜித்திற்கு ஒரு தர லோக்கலான பாடல் உள்ளது. அது ஆளுமா டோலுமா பாடலை போலவே மிக பெரிய ஹிட்டடிக்கும் என கூறியுள்ளார்.
இதனால் ஆளுமா டோலுமா போன்ற ஒரு தர லோக்கலான கொண்டாட்டம் விஸ்வாசம் படத்திலும் ரசிகர்களுக்கு காத்திருக்கு.. கொண்டாட தயார் தானே ரசிகர்களே.