Kuppathu Raja Thara Local Song

Thara Local Song : குப்பத்து ராஜா படத்தில் இருந்து தர லோக்கல் பாடலை பிரபல நடிகரான சூர்யா வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி. வி பிரகாஷ். இவர் தற்போது பல படங்களை கை வசமாக வைத்து கொண்டிருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளியான சர்வம் தாளமயம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்.எஸ் பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள திரைப்படம் குப்பத்து ராஜா.

இந்த படத்தில் ஜி.வி பிரகாஷுடன் இணைந்து பார்த்திபன், எம்.எஸ் பாஸ்கர், பூனம் பாஜ்வா, பல்லக் லால்வாணி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எஸ். போகஸ் சரவணன் அவர்கள் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட், சென்னை பாஷை என முழுக்க முழுக்க தர லோக்கலாக வெளியாகி ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரையும் கவர்ந்திருந்தது. மேலும் படத்திற்கு U/A சான்றிதழும் கிடைத்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து தர லோக்கல் என்ற பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை நடிகர் சூர்யா ரிலீஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.