Thalapathy Vijay Decision on Upcoming Movies

தளபதி விஜய் தன்னுடைய அடுத்தடுத்த பட தயாரிப்பில் அதிரடியான முடிவை ஒன்றை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thapathy Vijay Decision on Upcoming Movies : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க தளபதி விஜய்யின் உறவினரான பிரிட்டோ மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு அடுத்ததாக தளபதி 66 என்ற படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

விஜய்யை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்!

ஆனால் தற்போது விஜய்க்கும் அந்நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படத்தை சுறா படத்தை தயாரித்த சங்கிலி முருகனுக்கு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இனி தன்னுடைய அடுத்தடுத்த படங்களை தன்னால் தோல்வியடைந்த படங்களை ஈடு செய்யும் வகையில் பழைய தயாரிப்பாளர்களுக்கு கொடுக்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தல அஜித் விவேகம் திரைப்படம் தோல்வியில் முடிந்ததால் விசுவாசம் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு அளித்தார். இதேபோல் ஏற்கனவே ஓரிரு முறை அஜித் தோல்வி படத்தை ஈடுசெய்ய அதே தயாரிப்பு நிறுவனங்களுக்கு மீண்டும் படம் கொடுத்துள்ளார்.

தற்போது தளபதி விஜயும் அதே ஸ்டைலை கையில் எடுத்து இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.