Thanya Ravichandran Rejects Thalapathy65

தளபதி 65 பட வாய்ப்பை நிராகரித்து உள்ளார் விஜய் சேதுபதி பட நடிகை.

Thanya Ravichandran Rejects Thalapathy65 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 65 படம் உருவாக உள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு மற்றும் விடிவி கணேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

மேலும் நாயகியாக ராஷ்மிகா மந்தனா அல்லது ராசி கண்ணா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை வேண்டாம் என விஜய் சேதுபதி பட நடிகை ஒருவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதாவது கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தன்யா ரவிச்சந்திரன். தளபதி 65 படக்குழு இவரை அணுகி இந்த படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கொடுக்க முடியுமா என கேட்டுள்ளது.

அதற்கு தன்யா ரவிச்சந்திரன் முடியாது என மறுத்து விட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.