தியாகராஜன் சார்க்கு நன்றி தெரிவித்துள்ளார் சிம்ரன்.
90 களின் பேவரட் ஹீரோவாக இருந்தவர் பிரசாந்த். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்தகன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவது மட்டுமில்லாமல், வசூலிலும் தூள் கிளப்பி வருகிறது.
சிம்ரன், பிரசாந்த், கே எஸ் ரவிகுமார், பூவையார், பிரியா ஆனந்த், யோகி பாபு ,ஊர்வசி ,கார்த்திக் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தில் சிம்ரன் வில்லியாக மிரட்டியுள்ளார். அவருக்கு இந்த படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்தகன் படத்தின் பிரீமியர் ஷோ முடிந்த கையோடு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சிம்ரன், இந்த வாய்ப்பை கொடுத்த தியாகராஜன் சாருக்கு ரொம்ப நன்றி என்று கூறியுள்ளார். இந்த கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாக மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.