தங்கலான் படக்குழுவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் சியான் விக்ரம். டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கும் இவரது நடிப்பில் வெளியாகும் பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ளன. சியான் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான மகான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் வெளியாக உள்ளது.

தங்கலான் படக்குழுவின் நியூ கிளிக்!!… இணையதளத்தில் வைரல்.!

மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இந்த திரைப்படம் கேஜிஎப் படத்தில் இடம்பெறும் மனிதர்களின் வாழ்க்கையை பற்றியதாக இருக்கும் என இயக்குனர் பா ரஞ்சித் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். தற்போது படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் பிஸியாக நடைபெற்று வருகிறது.

தங்கலான் படக்குழுவின் நியூ கிளிக்!!… இணையதளத்தில் வைரல்.!

இந்நிலையில் நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கலான் படத்தின் படக்குழுவான சியான் விக்ரம், பா ரஞ்சித் அவர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது