தங்கலான் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வைரல்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். இவர் தற்போது சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இந்த திரைப்படம் கேஜிஎப் படத்தில் இடம்பெறும் மனிதர்களின் வாழ்க்கையை பற்றியதாக இருக்கும் என இயக்குனர் பா ரஞ்சித் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.

பா.ரஞ்சித்தின் பிறந்த நாளை முன்னிட்டு… தங்கலான் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு.!

தற்போது படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் பிஸியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இயக்குனர் பா ரஞ்சித்தின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. தூள் கிளப்பி வரும் இந்த புதிய போஸ்டர் தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.