தங்கலான் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் அளித்திருக்கும் சமீபத்திய பேட்டி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மாபெரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சீயான் விக்ரம். இவரது நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்திலும் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை பட குழு சமீபத்தில் வெளியிட்டு இப்படம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்திருந்தது.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா அவர்கள் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் தங்களான் திரைப்படத்தை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இது மட்டும் இன்றி டொராண்டோ பெர்லின் உள்ளிட்ட 9 வகையான சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இதைக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். இவரது இந்த சுவாரசியமான அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.