தங்கலான் படத்தின் டிக்கெட் புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. பா ரஞ்சித் இயக்கத்திலும், ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, டேனியல் கால்டாகிரோன், ஹரி கிருஷ்ணன் அன்புதுரை போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
நாளை வெளியாகப் போகும் இந்த படத்திற்காக டிக்கெட் புக்கிங் சூடு பிடித்துள்ளது. காலை முதல் இரவு வரை டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது அவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றன. சமீபத்தில் விக்ரமிடம் உங்களுக்கு ரசிகர்கள் இருக்கா? என்ற கேள்வி எழுப்பியதற்கு இது ஒரு சிறந்த பதிலடியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன.