Thanga Tamilselvan :
Thanga Tamilselvan :

Thanga Tamilselvan : தேனி: ஆண்டிபட்டியில் வருமான வரித்துறை கைப்பற்றியது எங்கள் கட்சி பணம் இல்லை என்று அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பதில் அளித்துள்ளார்.

ஆண்டிப்பட்டியில் நேற்றிரவு அமமுக கட்சியினர் பணம் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் அறிந்து அதிரடியாக சோதனை நடத்த சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த சம்பவம் தேனியில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது முற்றிலும் வருமானவரி துறையினர் திட்டமிட்டு நடத்தும் சதி” என்று கூறினார்.

மேலும் துணை முதல்வர் ஓபிஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள போலீசாரின் ஆட்டம் இது, என பதில் அளித்தார்.

மேலும் அதிமுகவும், தேர்தல் ஆணையமும் இணைந்து நாடகம் நடத்துகிறது.அதோடு பணம் எனது கட்சிக்காரர் வீட்டில் இருந்து கைப்பற்றப்படவில்லை.

அதிமுக அலுவலகத்தில் நாங்கள் பணத்தை வைப்போமா? என கேள்வி எழுப்பினார். அதிமுக பிரமுகர் அமரேஷ் கட்டடத்தில் பணத்தை வைக்க நாங்கள் முட்டாளா ? எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மேலும் தோல்வி பயம் காரணமாத்தான் சோதனை நடக்கிறது. எனவே இதன் காரணமாக எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, சாதகமாகத்தான் அமையும். எந்த வழக்கு பதிந்தாலும் சந்திக்க தயார் என கூறினார்.

மேலும் தொகுதி முழுவதும் மக்களவை தொகுதிக்கு ஒரு ஓட்டுக்கு ரூபாய் 1000, சட்டசபை தொகுதிக்கு ஒரு ஓட்டுக்கு ரூபாய் 2000 என அதிமுகவினர் தான் வழங்கியுள்ளனர்.

பணம் கொடுத்த ஆதாரம் எங்களிடம் உள்ளது. இவர்களை போலீசார் கைது செய்ய தயாரா(!?) எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here