Thandalkaaran
Thandalkaaran

Thandalkaaran : செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும் முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்மையில் டீசரை வெளியிட்ட படக்குழு தற்போது இப்படத்தின் முதல் பாடலை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் கபிலன் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல் அதன் உள்ளடக்கத்திற்காக தற்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்பாடல் குறித்த ருசிகர தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்த பாடல் நான்கு நாட்களுக்கு முன்புதான் பதிவானதாம்.

அதற்குள் மிக்ஸிங் செய்து அற்புதமான தரத்தில் பாடலை யுவன் ஷங்கர் ராஜா உருவாக்கிவிட்டாராம். இத்தகவலை இப்பாடலை பாடிய ரஞ்சித் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

யுவன் – செல்வா கூட்டணியின் மேஜிக் இந்த பாடலில் மிஸ் ஆனாலும் கபிலனின் அற்புதமான வரிகளுக்காக இப்பாடல் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் இப்படம் மே 31-ம் தேதி திரைக்குவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.