Thandalkaaran Song NGK
Thandalkaaran Song NGK

Thandalkaaran Song NGK – செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும் முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்மையில் டீசரை வெளியிட்ட படக்குழு தற்போது இப்படத்தின் முதல் பாடலை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் கபிலன் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல் அதன் உள்ளடக்கத்திற்காக தற்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக இப்பாடலின் வரிகளை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இப்பாடலை எழுதிய கபிலனுக்கு பதிலாக பலரும் வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்துவை பாராட்டி வருகிறார்கள்.

இதனால் பதறிப்போன கபிலன் வைரமுத்து, இந்த பாடலை தான் எழுதவில்லை என்றும் தன்னுடைய சீனியர் கவிஞர் கபிலன் எழுதியதாகவும் டிவிட்டரில் விளக்கமளித்துள்ளார்.