குக்கு வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி தாமு பதில் அளித்துள்ளார்.

Thamu About CWC3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இதுவரை இரண்டு சீசன்களில் ஒளிபரப்பான நிலையில் இரண்டுமே மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்க தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

L

இந்த நிலையில் விரைவில் மூன்றாவது சீசன் தொடங்கப்பட இருப்பதாகவும் அதற்கான புரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில் புகழ் மட்டும் இடம்பெறவில்லை. இதனால் குக்கு வித்து கோமாளி சீசன் 3 புகழ் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இதே கேள்வியை செப் தாமு அவர்களிடம் ரசிகர்கள் கேட்க அவர் 100 சதவீதம் புகழ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். புகழுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்து வருவதால் அவர் மூன்றாவது சீஸனில் நேரம் கிடைக்கும் போதுதான் தலை காட்டுவார் எனவும் சொல்லப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.