பத்திரிக்கை வைக்க சந்திரகலா அழைக்க அதனை கோதை மறுத்துள்ளார்.

Thamizhum Saraswathiyum Episode Update 28.10.2021 : தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தமிழும் சரஸ்வதியும். கோதை வீட்டிற்கும், சந்திர வீட்டிற்கும் கல்யாண பத்திரிக்கை இன்றே கொடுத்து விடலாமா என்று நடேசன் கேட்கிறான்.

பத்திரிக்கை வைக்க அழைக்கும் சந்திரகலா அதை மறுக்கும் கோதை, பரபரப்பாகும் சீரியல் – தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!

அதற்கு கோதை முதல் பத்திரிக்கை நம்ப குல தெய்வத்துக்கு வைக்க வேண்டும் என கூறுகிறார். பிறகு தமிழ் கல்யாண இன்விடேஷன் வைக்க லிஸ்ட் ரெடி பண்ணிவிட்டேன் என கூறுகிறார்.

அந்த பக்கம் சந்திரகலா பத்திரிக்கை எல்லாம் சூப்பர் என்று சொன்னார். நடேசன் முதல் பத்திரிக்கை குல தெய்வத்துக்கு வைத்து படைக்க வேண்டும் என்று சொன்னதும் சந்திரா எதுக்கு சும்மா ரெண்டு குடும்பமும் சேந்து போயிட்டு உங்க பக்கம் நீங்க பாருங்க எங்க பக்கம் நாங்க பார்த்து கொள்கிறோம் என்று சந்திரகலா கூறுகிறார். ஆனால், சந்திரகலா மினிஸ்டர் வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க போகணும் ஈவ்னிங் புறப்பட்டு வந்துடுங்க என்று சொன்னதும் , அதை மறுத்து கோதை நம்ப சாமிக்கு கூட வீட்டில் வைத்து கும்பிடலாம். ஆனால் மனுஷனுக்கு வைக்கணும் என்றால் நம்ப அண்ணனுக்கு தான் வைக்கணும் என்று கூறிவிட்டார்.

அதற்கு பிறகு நடேசன், கோதை என இருவரும் அவர்கள் அண்ணன் வீட்டிற்கு சென்று பத்திரிக்கை வைத்தார்கள். அங்கு கோதை தமிழுக்கும் நல்ல பெண் பார்த்து விட்டோம். நல்லா படிச்சிருக்கா, நல்ல குணம் , அழகான என் குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணா நாங்க பார்த்து வைத்திருக்கோம் என்று கோதை அவங்க அண்ணன், அண்ணியிடம் கூறுகிறார். இந்த விஷயம் தெரிந்ததும் சந்திரகலாவிடம் கோதை அண்ணி கோதை பெண் பார்த்ததை பற்றி கூறினார்.

சந்திரகலா அது யார் என்று யோசித்து அது சரஸ்வதி என்று சொன்னார். யாராக இருந்தாலும் தமிழுக்கு நான் பார்த்த பெண் தான் கல்யாணம் செய்து வைக்கணும் என்று சந்திரகலா கூறுகிறார்.

இந்த பக்கம் தமிழ், சரஸ்வதிக்கு கால் செய்து அவங்க அம்மா புகழ்ந்ததை, பற்றி கூறுகிறார். தமிழ் சரஸ்வதியிடம் நாளைக்கு உன்னை பார்க்கணும். நேரில் பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என தமிழ் சொன்னார். உன்னை நேரில் பார்க்க வேண்டும் அது தான் முக்கியம் சரஸ். கல்யாணம் வேலை ஆரம்பித்ததும் உன்கிட்ட பேச கூட நேரம் இருக்காது. அதனால் நாளைக்கு கண்டிப்பா நீ வரவேண்டும் என்று கூறி விட்டு கால் கட் செய்து விட்டார்.

இத்துடன் முடிகிறது இன்றைய தமிழும் சரஸ்வதியும் சீரியல் எபிசோட்.