தமிழ் ஃபேமிலி உடன் சரஸ்வதி ஒன்று சேர்க்கிறார்.

Thamizhum Saraswathiyum Episode Update 26.10.2021 : தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தமிழும் சரஸ்வதியும். தமிழின் ஃபேமிலி ஒட்டுமொத்தமாக ஜவுளி கடைக்கு வருகிறார்கள். கோதை நல்ல நேரம் முடியறதுகுள்ள முகூர்த்த புடவை எடுக்கலாம். பிறகு நம்ப எல்லோருக்கும் எடுக்கலாம் என்று அவர் கணவரிடம் கூறுகிறார்.

பின்பு சந்திரகலாவிடம் கோதை புடவை செலக்சனுக்கு அழைத்த போது சந்திரகலா மறுத்தார். அதன் பிறகு சரஸ்வதி புடவை கடைக்கு வந்தாள். வசுந்தராவிற்கு கோதை ஒவ்வொரு புடவையாக பார்த்த போது தமிழ் எந்த புடவையும் நல்லா இல்லை என்று மறுத்தான். பிறகு சரஸ்வதி கடைசியாக ஒரு புடவையை தமிழிடம் காட்டி எடுக்க சொன்னாள். சந்திரகலா ஜவுளி கடையில் இருந்து புறப்பட்டார்.

தமிழகத்தில் மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை, ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை

தமிழ் ஃபேமிலியுடன் ஒன்று சேரும் சரஸ்வதி இன்றைய ட்விஸ்ட் – தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட் அப்டேட்.

கோதை திடீரென்று சரஸ்வதியை கடைக்குள் பார்த்து அவளை அழைத்தார். சரஸ்வதியிடம் கோதை அவங்க ஃபேமிலி அனைவரையும் அறிமுகப்படுத்தினார் . கோதை சரசுயிடம் சரசு கண்ணு நீ எதுக்கு வந்தியோ அது எல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். இப்போ எங்க கூட புடவை செலக்ட் பண்ணு என்று கூறினாார். சரஸ்வதியும் தயங்கி பிறகு அவள் எல்லோருக்கும் புடவை செலக்ட் செய்தாள். பிறகு நடேசனை கூப்பிட்டு கோதை அவளை பார்த்திங்களா புடவை ரேட் பாக்குறா. ஆனால் எடுக்க மாட்றா அப்படியே என்னோட குணம் என்று சொல்கிறார். அந்த புடவை அந்த விலைக்கு வொர்த்தா என்று பார்க்கிறார். நடேசன் லேடீஸ்க்கு மட்டும் தான் எடுப்பியாமா எங்களுக்கும் எடு என்று சரஸ்வதியிடம் கேட்டார். அதற்கு சரஸ்வதி அதற்கு என்ன மாமா வாங்க எடுக்கலாம் என்று கூறினார்.

கோதை சரஸ்வதிக்கும், மின்னலுக்கும் புடவை எடுத்து கொடுத்து விட்டு நீங்களும் கல்யாணத்துக்கு வரணும் என்று சொன்னார். அதற்கு சரஸ்வதி அத்தை நாங்க எப்படி வரமுடியும் என்று கேட்கிறாள். கோதை நாங்க குடும்பமாக வந்து பத்திரிக்கை வைக்கிறோம் சரஸ்வதி என்று கூறுகிறார்.

Superstar Rajinikanth-ன் உண்மையை உடைத்த Soundarya Rajinikanth.! 

நடேசன் கோதையிடம் கல்யாணத்துக்கு வந்துருமா என சொன்னால் போதும், குடும்பமாக அவங்க வீட்டிற்க்கு போனால் அவங்க ஃபேமிலி அவளிடம் கேள்வி கேட்க மாட்டங்களா? கோதை சரஸ்வதியை பார்த்து நீ என் குடும்பம் என்று என் மனசு சொல்லிகிட்டே இருக்கு சரஸ்வதி என சொல்கிறார்.

சரஸ்வதி சந்தோஷப்பட்டு கண்டிப்பாக நாங்க கல்யாணத்துக்கு வருவேன் அத்தை என்று கூறினார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட், நாளைய எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.