Thambi Movie Review
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், சீதா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தம்பி.

படத்தின் கதைக்களம் :

கோவில்களில் திருட்டுத்தனம் செய்து வாழ்க்கையை ஒட்டி வரும் கார்த்தியை ஒரு நாள் போலீஸ் துரத்த அவர் வாழ்க்கையே மாறி போகிறது.

அரசியல் பிரமுகரான சத்யராஜிற்கு ஒரு மகனும் ஒரு மகளும் ( ஜோதிகா ) உள்ளார். மகன் 15 வயதில் காணாமல் போய் விட அதன் பின்னர் கார்த்தி ரூபத்தில் கிடைக்கிறார்.

இந்நிலையில் மலைவாழ் மக்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட அவர்களுக்கு ஆதரவாக சத்யராஜ் போராடுகிறார். இதனால் அவருக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது, கார்த்திக்கும் கொலை மிரட்டல் வருகிறது.

இவற்றையெல்லாம் கார்த்தி எப்படி சமாளித்தார்? இறுதியில் என்ன நடந்தது? என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றய அலசல் :

நடிப்பு :

கார்த்தியின் நடிப்பு வழக்கம் போல அட்டகாசம். காமெடி, எமோஷன், ஆக்ஷன் என அனைத்திலும் அதிரடி காட்டுகிறார்.

ராட்சியாக மிரட்டிய ஜோதிகா இந்த படத்தில் பாசமுள்ள அக்காவாக நம்மை கவர்கிறார். சத்யராஜ் எதார்த்தமான நடிப்பு சீதாவின் அமைதியான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

நாயகியாக நடித்துள்ள நிகிதா விமல் அவர் பங்கிற்கு அழகான நடிப்பை கொடுத்துள்ளார். காதல் காட்சிகளில் நம்மை உருக வைக்கிறார்.

தொழில்நுட்பம் :

இசை :

கோவிந்த் வசந்தாவின் இசை பிரமாதம், பாடல்களும் ரசிக்கும் வண்ணம் உள்ளது.

ஒளிப்பதிவு & எடிட்ங் :

ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவு சூப்பர், வி.எஸ் விநாயக்கின் எடிட்டிங் கச்சிதம்.

இயக்கம் :

ஜீத்து ஜோசப் அவருடைய தனித்துவமான ஸ்டைலில் படத்தை இயக்கி கொண்டு சென்றுள்ளார். ஸ்க்ரீன் பிளே சூப்பர், முதல் பாதியில் கொஞ்சம் மெதுவாக செல்வது போல இருந்தாலும் ட்விஸ்ட்டுகளால் நம்மை கட்டி போடுகிறார்.

தம்ப்ஸ் அப் :

1. கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பு
2. கதைக்களம்
3. கிளைமாக்ஸ்
4. படத்தின் ட்விஸ்ட்

தம்ப்ஸ் டவுன் :

1. சில லாஜிக் தவறுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here