Thambi
ரிலீசான நாளே தம்பிக்கு வந்த சோதனை படக்குழுவினரை மட்டுமில்லாமல் திரையுலகையும் அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி தன்னுடைய அண்ணியார் ஜோதிகாவுடன் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் தம்பி. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

பல தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கே படம் வெளியாகி ஓரளவிற்கு நல்ல வரவேற்பையே படம் பெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று மதியமே இப்படம் தமிழ் ராக்கர்ஸில் லீக்கானது படக்குழுவை பேரதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

தமிழ் திரையுலகமே தமிழ் ராக்கர்ஸை ஒழித்து கட்ட வேண்டும் என கோரிக்கைகளை வைத்து வரும் நிலையில் நாளுக்கு நாள் இந்த இணையதளத்தின் அட்டூழியம் அதிகமாகி கொண்டே செல்வது பிரபலங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.